சென்னை,மார்ச் 24- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுமுறை பயண மாக துபாய் மற்றும் அபுதாபிக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் உலகக் கண்காட்சிகள் மிகப் பழமை யானதும், மிகப் பெரிய சர்வசேத நிகழ்வுகளில் ஒன்றும்கூட. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப் படுகிறது. இந்த கண்காட்சி 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி தொடங்கியது. இம் மாதம் 31 ஆம் தேதி முடிவடைகிறது. துபாயில் நடை பெற்று வரும் எக்ஸ்போ கண்காட்சி மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசி பிராந்தியத்தில் நடத்தப் படும் முதல் உலக கண்காட்சியாகும். இந்த உலக் கண்காட்சியில் தமிழ்நாடு அரசு சார்பில் மார்ச் 25 அன்று அரங்கு திறக்கப்பட்டு மார்ச் 31 ஆம் தேதி வரை ‘தமிழ்நாடு வார மாக’ அனுசரிக்கப்படுகிறது.
இந்த அரங்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந் நிலையில் முதலமைச்சரின் பயணம் வெற்றிகரமாக அமைய, தமிழக சட்டப்பேரவையில் வியாழக் கிழமை (மார்ச்24) பேரவைத் தலைவர் மு.அப்பாவு, அவை முன்னவர் துரை முருகன், சட்டமன்ற பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்தி பேசினர். பிறகு பேசிய மு.க.ஸ்டா லின், “பல்வேறு மாநிலங்களில், வெளிநாடுகளில் பாராட்டப்படக் கூடிய அளவிற்கு மாநில அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த அரசைப் பொருத்தவரை எவ்வளவு துறைகள் இருந்தாலும், முக்கியமான துறை நிதித்துறை தான். அந்த நிதித்துறை பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கக்கூடிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மிகச் சிறப்பான வகையில் தன்னிடம் உள்ள அனுபவங்களை கொண்டு, வெளிநாடுகளில் பெற்றி ருக்கக்கூடிய நல்ல அம்சங்களை யெல்லாம் மனதில் தேக்கி வைத்துக் கொண்டு சிறப்பாக பணியாற்று கிறார்” என்றார். வேளாண்துறை அமைச்சரும், தன்னுடைய கடமையை சிறப்பாக நிறைவேற்றியிருக்கிறார். இது ஆண்டுதோறும் தொடர வேண்டும். எனக்கு அந்த நம்பிக்கை நிச்சயமாக உள்ளது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
இலங்கை தமிழர்கள்
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், “இலங்கை தமிழர்கள் தற்போது பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுதொடர்பாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, ஒன்றிய அரசிடமும், அதிகாரிகள் மற்றும் அமைச்சர்க ளிடம் தொடர்புகொண்டு பேசி வருகி றோம் என்றும் கூறினார். இந்தியாவில் நம்பர் 1 முதல்வர் என பாராட்டப்படுவது எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் அதைவிட மகிழ்ச்சி இந்தியாவில் நம்பர் 1 மாநிலம் தமிழகம்தான் எனக் கூறும்படி வரவேண்டும் என்பதற் காகத்தான் பணியாற்றிக் கொண்டி ருக்கிறோம். இதற்கு நான் மேற் கொள்ளவிருக்கும் துபாய், அபுதாபி பயணம் நிச்சயம் துணை நிற்கும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.