tamilnadu

img

சிறுமி டானியாவுடன் முதலமைச்சர் சந்திப்பு

சென்னை, பிப். 8- திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, ஸ்ரீவாரி நகரைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் மற்றும் சௌபாக்கியம் தம்பதியரின் 9 வயது மகள் டானியா அரிய வகை முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, பல ஆண்டு களாக பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டும் நோய் குணமாகாமல் இருந்தது.  இதுகுறித்து அறிந்த வுடன் முதல்வர் மு.க.ஸ்டா லின், சிறுமி டானியாவிற்கு  அறுவை சிகிச்சை மேற் கொள்ள மாவட்ட நிர்வா கத்திற்கு உத்தரவிட்டு, சவிதா மருத்துவக் கல்லூரி யில் சிறுமிக்கு முகச் சீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.  இதனைத் தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை  (பிப்.8) இரண் டாவது முறையாக, சிறுமி  டானியாவின் இல்லத்திற்கு நேரில் சென்று, அச்சிறு மியை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது முதல்வர், எலும்பு வளர்ச் சிக்கு தேவையான ஊட்டச் சத்து மிக்க உணவுகளை உண்ண வேண்டும் என்றும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்து களை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி, தொடர் சிகிச்சைக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் தெரிவித்தார். அரும்பின் அழகு சிறுமி டானியாவின் தாய் திருமதி சௌபாக்கியம், தனது இல்லத்திற்கு நேரில் வந்து மகளை நலம் விசா ரித்து, தேவையான உதவி கள் அனைத்தும் செய்து  தரப்படும் என்று தெரிவித் ததற்காக முதல்வருக்கு நன்றியினை தெரிவித்துக் கொண்டார். இது தொடர் பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதி விட்டு, அரும்பின் அழகு  டானியாவின் புன்னகை யில்! என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.