சென்னை, நவ.16- தேசிய பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா தொடங்கப்பட்ட நவம்பர் 16-ஆம் நாள், தேசிய பத்திரிகையாளர் நாளாக 1996-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வரு கிறது. அந்த வகையில், சனிக்கிழ மையன்று தேசிய பத்திரிகை யாளர் தினத்தையொட்டி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமது சமூகவலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். “தேசிய பத்திரிகை தினத்தில், உண்மையை நிலைநிறுத்த அயராது பாடுபடும் ஊடகவியலாளர் களுக்கு மரியாதை செலுத்துகிறோம். உண்மைக்கான பயணத்தில் அவர்களின் இடைவிடாத முயற்சிகளை நாங்கள் மதிக்கிறோம். சகிப்புத்தன்மையற்ற சகாப்தத்தில், பத்திரிகையாளர்களின் தைரியமே, ஜனநாயகத்தின் கடைசி பாதுகாப்பு அரணாக உள்ளது. அச்சம், சார்பு இன்றி பத்திரிகைத் துறை செழிக்க வேண்டும். நமது ஜனநாயகத்தைப் பாது காக்கும் குரல்களைப் பாதுகாப்பதில் உறுதியாக நிற்போம்” எனத் தெரிவித்துள்ளார்.