tamilnadu

img

ரசாயனக் கழிவு நுரைகளுடன் செல்லூர் கண்மாய்... மெத்தனத்தில் மதுரை மாநகராட்சி, மாவட்ட நிர்வாகங்கள்

மதுரை:
மதுரையில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. வெள்ளிக்கிழமை இரவு சுமார்ஒன்றரை மணி நேரம் மழை கொட்டித்தீர்த்தது. மதுரையைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களிலும் மழை பெய்ததால் மதுரை செல்லூர் கண்மாய்க்கு தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது. வந்த தண்ணீர் மழை நீராக இருந்தால் பரவாயில்லை. ரசாயனக்கழிவுகளுடன் நுரை பொங்கி வந்தது.மழை நீரோடு, கழிவு நீரும் சேர்ந்து செல்லூர் கண்மாயை வந்தடைந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
செல்லூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் தண்ணீருடன் பொங்கி வந்த நுரையை பிரித்தெடுத்து சாலையோரங்களில் சேமித்தனர். ரசாயனக் கழிவுடன் பொங்கி வந்த நுரையை மதுரை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் வந்து ரசாயனப் பொடிகலந்த தண்ணீரை பீய்ச்சி அடித்துநுரையை தண்ணீரோடு கலந்துவிட்டனர். வடகிழக்குப் பருவ மழை தொடங்கியதைத் தொடர்ந்து கடந்த பத்து நாட்களுக்கு முன்பே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மீனாம்பாள் புரம் பகுதிக்குழுச் செயலாளர்  பாலு, மாநகராட்சி ஆணையர் ச.விசாகன், மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ஆகியோரைச் சந்தித்து செல்லூர் கண்மாய்,வைகையாற்றில் வளர்ந்துள்ள ஆகாயத் தாமரைகளை அப்புறப்படுத்த வேண்டுமென மனு அளித்துள்ளார். சனிக்கிழமை வரை மாநகராட்சியோ, மாவட்ட நிர்வாகமோ எந்த நடிவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருந் துள்ளது.

தூர்வாரியது எப்படி?
 இது குறித்து அவர் கூறுகையில், “ செல்லூர் கண்மாயில் ஆகாயத்தாமரை  அதிகளவில் வளர்ந்துள்ளதால்  கழிவு நீர் அதிகம் தேங்கி உள்ளது.இதனால் தண்ணீர் மாசடைந்துள் ளது. செல்லூர் பகுதியில் மட்டும் சுமார்இரண்டு லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். செல்லூர் கண்மாய், வைகையாற்றில் உள்ள ஆகாயத்தாமரைகளையும், கழிவு நீரையும் அப்புறப்படுத்தி தண் ணீரைத் தேக்கினால் நிலத்தடி நீர் மட்டும் உயருமென்றார்”.மேலும் அவர் கூறுகையில், செல்லூர் கண்மாயில் தூர்வாரும் பணிநடைபெற்றது. கரைகள் மட்டுமே சற்றுபலப்படுத்தப்பட்டது. கண்மாயிலிருந்த ஆகாயத் தாமரைகளை அகற்றவில்லை. இதற்கு பெயர் தான் “தூர் வாருதல்” என்றார்.  

தொடரும் அலட்சியம்
மதுரை பாத்திமா கல்லூரி அருகில்உள்ள ஆலமரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த மழையால் குளம் போல் தண் ணீர் தேங்கியது. குட்டையாக இருந்த இந்த பேருந்து நிறுத்தம் சாதாரண மழைக்கே குளமாக மாறியது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கைலாசபுரம் பகுதி சாலை - தத்தனேரி மயானத்திற்குச் செல்லும் சாலைமிகவும் சிதிலமடைந்து மோசமான நிலையில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் செல்லவோ அல்லது  பொதுமக்கள் நடந்து செல்லவோ முடியாத அளவிற்கு சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பது வழக்கம்.எனவே ஓரிரு தினங்களுக்குள் மதுரை மாநகராட்சி  ஆலமரம் பேருந்து நிறுத்தம் குளமாக மாறுவதை தடுக்க வேண்டும். தத்தனேரி மயானத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும். தவறினால் போராட்டம் தான் என்கிறார் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் செல்லூர் பகுதிக்குழுச் செயலாளர் ஜா.நரசிம்மன்.மதுரை மாநகராட்சி நிர்வாகம்கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். வரத்துக்கால்காய்களில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகளை அள்ள வேண்டும்.தொடர் மழையிலிருந்து இந் தாண்டு மதுரையைக் காப்பாற்ற வேண்டும். வரத்துக்கால்வாய்கள், கண்மாய்களை பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்தி மதுரை மக்கள்போராட்டம் களம் காண தயாராகி வருகிறார்கள். முதலில் நடக்கப் போவதுபோராட்டமா? மதுரை மாநகராட்சியின் துரித நடவடிக்கையா? என்பது இன் னும் ஓரிரு நாட்களில் வெளிப்பட்டு விடும்.

;