காசர்கோடு, நவ. 1- கேரள மாநிலம், கும்பளாவில் பேருந்து ஊழியர்களுக்கும் மாண வர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலை வகுப்புவாதப் பிரச்சா ரத்திற்கு பயன்படுத்திய பாஜகவைச் சேர்ந்த அனில் கே ஆண்டனி (ஏ.கே. அந்தோணியின் மகன்) மீது காசர்கோடு சைபர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனைச் சட்டத்தின் 153-A (மத வெறுப்பைத் தூண்டு தல்) பிரிவின் கீழ் ஜாமீனில் வெளி வர முடியாத வகையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 20ஆம் தேதி கும்பளா-முல்லேரியா வழித்தடத்தில் பேருந்தை நிறுத்தாதது தொடர்பாக கும்பளா கான்சா கல்லூரி மாண வர்களுக்கும், பேருந்து ஊழியர் களுக்கும் இடையே தகராறு ஏற்பட் டது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட அனில் ஆண்டனி சமூக வலைதளமான ‘எக்ஸ்’ பக்கத்தில் ‘புர்கா அணியாத இந்துப் பெண் கும்பளா பேருந்தில் தாக்கப் பட்டுள்ளார்’ என பொய்யான செய்தி யை ரீ-ட்வீட் செய்துள்ளார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்எப்ஐ மாவட்டச் செயலாளர் எம்.டி.சித்தார்த்தன் மாவட்ட காவல்துறைத் தலைவரிடம் புகார் அளித்தார். அதன் பேரிலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அனிலுடன் இணைந்து இதே போலி பிரச்சாரத்தை நடத்திய ஆனந்தி நாயர் மீதும் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.