tamilnadu

img

அந்த பயங்கரங்களை மறந்து விட முடியுமா?

ஜனநாயக குடியரசு என்பதற்கும், மதச்சார்பற்ற அரசு என்பதற்கும் கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கக் கூடிய ஆபத்துகளையெல்லாம் நீங்கள் அறிவீர்கள். 2014 -ல் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து வெளிநாடுகளை முழுவதும் சுற்றியிருக்கிறார். ஹெலிகாப்டரிலேயே பறந்தார். சென்ற நாடுகளில் எல்லாம் பல வாக்குறுதிகளை அள்ளி வீசினார். பாஜகவின் ஒரு தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்கு பிரதமர் மோடி ஒரு நபருக்கு மட்டும் ரூ. 5ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது. இது என் கணக்கு இல்லை. பாஜகவே தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ள கணக்கு. யார் இந்த பணத்தை கொடுத்தார்கள்? அதானி, அம்பானி, உள்நாட்டு- வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பெனிகள் வழங்கியுள்ளன. 


எதற்காக இந்தப் பணத்தை கொடுத்தார்கள்? 


ஒரு வியாபாரி முதலீடு செய்தால் லாபம் வர வேண்டும். லாபம் வேண்டாம் என முதலீடு செய்கிற எந்தவொரு வணிகரும் கிடையாது; முதலாளியும் கிடையாது. இந்த பெருமுதலாளிகள் எல்லாம் மோடி பிரச்சாரத்துக்கு ரூ. 5ஆயிரம் கோடியை அள்ளிக் கொடுத்தார்கள் என்றால், அடுத்து வரும் காலங்களில் அவருடைய ஆட்சியில் பல ஆயிரம் கோடிகளைப் பெற முடியும் என்ற நம்பிக்கையில்தான் வழங்கினார்கள். இப்படித்தான் பெரும் கொள்ளை அடித்தார்கள்.இந்துக்களுக்கு தலைவணங்கி, இந்து கலாச்சாரத்தை ஏற்று, இந்துஸ்தான் என்ற தேசத்தில் வாழ முடிந்தால் வாழுங்கள்; இல்லையென்றால், நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று முஸ்லிம் மக்களை பகிரங்கமாக மிரட்டியவர் கோல்வால்கர். இந்த தத்துவத்தின்படி செயல்படுகிற ஆர்எஸ்எஸ்-சின் பிரச்சாரகர்தான் மோடி. அதன் அரசியல் கட்சிதான் பாஜக. முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் அனைத்தும் ஏதோ கோபத்தில், ஆத்திரத்தில் நடத்தப்பட்டவையல்ல. சிறுபான்மையினரை அச்சுறுத்தி இந்த நாட்டை விட்டு அகற்ற வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கம்.1999 ஜன.23-ல் ஸ்டெயின்ஸ் என்ற ஆஸ்திரியப் பாதிரியார் தொழுநோயாளிகளுக்கு சேவை செய்வதற்காக இந்தியா வந்தார். அவருடன் அவரது இரண்டு குழந்தைகள் - ஒரு குழந்தை பெயர் பிலிப்ஸ், மற்றொரு குழந்தை பெயர் திமோதி. ஒரு நாள் இரவு காரில் வந்து கொண்டிருந்த அவர்கள், அசதியில் காரை ஓரமாக நிறுத்தி காரிலேயே அயர்ந்து தூங்கி விட்டனர். ஆர்எஸ்எஸ் கும்பல் அந்தக் காரை தீயிட்டுக் கொளுத்தி அவர்கள் 3 பேரையும் உயிருடன் படுகொலை செய்தது. 1999 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்தது பாஜக அரசுதான்.2007 ஆம் ஆண்டு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிப்பு சம்பவத்தையொட்டி குஜராத்தில் 2 ஆயிரம் இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பெண்கள் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டனர். இஸ்லாமிய கர்ப்பிணி பெண்களின் வயிற்றைக் கிழித்து, சிசு வெளியே எடுத்து வெட்டிப் பொசுக்கினர். மனிதாபிமானம் சற்றும் இல்லாத கொடூர குணம் படைத்த அந்த கூட்டத்தை வழிநடத்தி, பாதுகாத்தவர், இன்றைக்கும் பாதுகாப்பவர் அன்றைக்கு குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி. 


இந்த நிகழ்வுகளை நாம் மறந்துவிட முடியுமா? 2007 பிப்ரவரி 28 அன்று சம்ஜவுதா எக்பிரஸ் ரயிலில் திடீரென குண்டு வெடித்தது. இதில் 68 பேர் கொல்லப்பட்டனர். இதில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளும் ஆர்எஸ்எஸ் குண்டர்கள். இவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். இதேபோன்று, ஜிமாத் மசூதியில் குண்டு வைத்த அசீமானந்தாவும், மெக்கா மசூதியில் குண்டு வைத்த ஆர்எஸ்எஸ் குண்டர்களும் விடுதலை செய்யப்பட்டனர். இதை விட கொடூரம் தாத்ரி கிராமத்தைச் சேர்ந்த முகமது அக்லக். இவர் என்ன தவறு செய்தார்? வீட்டில் இருந்த பிரிட்ஜி-ல் கொஞ்சம் ஆட்டுக்கறி வைத்திருந்தார். அது மாட்டுக்கறிதான் என கூறி அவரை பசுக் குண்டர்கள் அடித்தே கொன்றனர். அக்லக்கின் மகனையும் தாக்கி படுகாயப்படுத்தினர். ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஜூனைத் என்ற 16 வயதுச் சிறுவன் நோன்பு பெருநாளை முன்னிட்டு, தனது சகோதரருடன் புத்தாடை வாங்குவதற்கு தில்லி சென்றார். புத்தாடை வாங்கி விட்டு, மாலை 3 மணிக்கு ரயிலில் வந்து கொண்டிருந்தபோது, பசுக் காவலர்கள் என்ற பெயரில் திடீரென ஒரு கும்பல் ரயிலுக்குள் நுழைந்து, ஜூனைத்தை அடித்துக் கொன்று, ரயிலிலிருந்து தூக்கி வெளியே வீசியது. ஆனால், இன்று வரை அந்த குண்டர்கள் கைது செய்யப்படவில்லை, தண்டிக்கப்படவில்லை.இப்படி ஏராளமாக அடுக்கிக் கொண்டே போகலாம். அனைத்திற்கும் காரணமாக ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பல் தலைவர் மோடியை வீழ்த்தியே தீரவேண்டும்.


-மதுரை காஜிமார் தெருவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது பேசியதிலிருந்து


பீ.பி.குளம் பகுதியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளர் சு.வெங்கடேசன்...

;