tamilnadu

img

ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து பிரச்சாரம்

ஒன்றிய பாஜக  அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுச்சேரி முழுவதும் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி நகரக்குழு சார்பில் வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை அருகில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு நகர செயலாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்று பேசினார். மாநிலச் செயலாளர் ஆர். ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர்கள் கொளஞ்சியப்பன்,சீனுவாசன், கலியமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.