tamilnadu

img

பட்ஜெட் கூட்டம் நிறைவு... தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு....

சென்னை:
தமிழ்நாடு சட்டப்பேர வையின் பட்ஜெட் கூட்டத் தொடர் மீண்டும் கூடும் தேதிகுறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.நடந்து முடிந்த சட்டமன்றதேர்தலில் திமுக தலைமை யிலான மதச்சார்பற்ற முற்போக்குகூட்டணி மாபெரும் வெற்றி பெற்று அதிமுகவை வீழ்த்தியது. இதன் மூலம் ஆட்சி அமைத்த மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்டு மாதம் 13 ஆம் தேதி தொடங்கியது. இடைக்காலதிருத்திய நிலை அறிக்கை மற்றும் சட்டப்பேரவை வர லாற்றில் முதல் முறையாக வேளாண்மைக்கு என்று தனியாக நிதி நிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதுவிவாதமும் அமைச்சர்களின் பதி லுரையும் நிறைவடைந்தது. 

அதன் தொடர்ச்சியாக, ஆக. 23 ஆம் தேதி முதல் துறை வாரியாக மானியக்கோரிக்கைகள் மீது தினசரி விவாதம் நடைபெற்றது. விவாதங்களுக்கு துறை சார்ந்த அமைச்சர்களும் முதலமைச்சரும் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர்.கூட்டத் தொடரின் கடைசி நாளான திங்களன்று (செப்.13) நீட் தேர்வை ரத்து செய்யும் சட்டத் திருத்த மசோதா கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.  மொ த்தத்தில் 23 நாட்கள்(ஒருநாள் மட்டும் மாலையிலும் பேரவை கூடியது) நடந்த பட்ஜெட் கூட்டத்தில் 
பல்வேறு முக்கிய அறிவிப்பு களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். இந்தநிலையில், பேரவைமீண்டும் கூடும் தேதியை குறிப்பிடாமல் பேரவைத் தலைவர் மு.அப்பாவு ஒத்திவைத்தார்.

;