tamilnadu

img

மாற்றுத்திறனாளி மாணவியின் நூல் வெளியீட்டு விழா

மாற்றுத்திறனாளி மாணவியின்  நூல் வெளியீட்டு விழா

புதுக்கோட்டை, அக். 13-  புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் மாற்றுத் திறனாளி மாணவியின் நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி மாணவி சஸ்ரீனா. இரண்டு கண்களும் பார்வையை இழந்த மாற்றுத் திறனாளியான இவர் 60 திருக்குறளின் கருத்துக்களை உள்ளடக்கி 60 சிறுகதைகளை படைத்துள்ளார். இந்தக் கதைகளின் தொகுப்பு வெளியீட்டு விழா சனிக்கிழமை 8 ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் நடைபெற்றது. நூலின் முதல் பிரதியை மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் வெளியிட, கந்தர்வகோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம். சின்னதுரை, சென்னை ஐஐடி திட்டத் தலைவர் என்.ஹரிகிருஷ்ணன், கவிஞர் மு.முருகேஷ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நிகழ்வில், கவிஞர் தங்கம்மூர்த்தி, கவிஞர் ஜீவி, நல்லாசிரியர் வீ. ஜோதிமணி, கவிஞர் காசாவயல் கண்ணன், கவிஞர் கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.