tamilnadu

img

புத்தக திருவிழாவில் நூல் வெளியீடு

தருமபுரி, டிச.25- தருமபுரி மதுராபாய் சுந்தரராஜராவ் திரு மண மண்டபத்தில் நடைபெற்று வரும் புத் தக திருவிழாவில் இரண்டாவது நாள் கருத் தரங்கிற்கு தகடூர் புத்தக பேரவை தலைவர் இரா.சிசுபாலன் தலைமை வகித்தார். ஆசிரி யர் மா.பழனி வரவேற்றார். நுகர்வெனும் பெரும்பசி என்ற தலைப்பில் ஊடகவியலா ளர் சித்ரா பாலசுப்பிரமணியன் பேசினார். இந்நிகழ்ச்சியில் தகடூர் புத்தக பேரவை செயலாளர் மருத்துவர் இரா.செந்தில், கவி ஞர் ரவீந்திரபாரதி, மருத்துவர் பகத்சிங், வெ.ராஜன், மா.கோவிந்தசாமி ச.ஹேம லதா ஜலஜாரமணி ஆகியோர் பங்கேற்று பேசினர். முன்னதாக பேராசிரியர் த.பழ மலய் எழுதிய தருமபுரி மண்ணும் மக்களும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் பள்ளி கல்லூரி மாணவர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். திருவள்ளூவர் புத்தக இல் லம் அறிவுடைநம்பி நன்றி கூறினார்.