tamilnadu

படகு கவிழ்ந்து விபத்து : 10 பேர் மீட்பு

மொராக்கோவின் டர்பயா கடல் பகுதியில் படகு கவிழ்ந்ததில்  மூன்று குழந்தைகள் உட்பட 43 புலம்பெயர்ந் தோர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் இருவரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பத்துப் பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். டர்பயா நகரில் இருந்து கேனரி தீவுகளுக்கு அழைத்துச் சென்ற போது இந்த சம்பவம் நடந்ததாக புலம்பெயர்ந்தோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகச் செயல்படும் ஸ்பெயின் செய்தி நிறுவனமான கேமினாண்டோ ஃபிரான்டெராஸின் தெரிவித்துள்ளது.