tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

புதுதில்லி ஜன்னலோர இருக்கைக்காக  பயணி மீது தாக்குதல் நடத்திய பாஜக எம்எல்ஏ

உத்தரப்பிரதேச மாநிலம் பாபினா சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ-வாக இருப்பவர் ராஜீவ் சிங். பாஜகவைச் சேர்ந்தவர். இவர் வியாழக்கிழமை அன்று புதுதில்லி - போபால் “வந்தே பாரத்” எக்ஸ்பிரஸில் பயணித்துள்ளார். அப்போது பயணி ஒருவரிடம்,”நான் பாஜக எம்எல்ஏ ஜன்னலோர இருக்கை வேண்டும்” என மிரட்டல் விடுத்துள்ளார். ஆனால் பயணி மறுக்கவே அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். பாஜக எம்எல்ஏவுடன் வந்த குண்டர்களும் அந்த பயணியை கொடூரமாக தாக்கினர். தாக்குதலுக்கு உள்ளான பயணி வெள்ளிக்கிழமை அன்று மத்தியப் பிரதேச மாநிலம் போபாலை அடைந்ததும் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை ஜான்சி ரயில்வே எஸ்.பி., விபுல் குமார் ஸ்ரீவஸ்தவா உறுதி செய்துள்ளார். ஆனால் பாஜக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு செய்தது தொடர்பாக எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2024 தேர்தலில் ரூ.1,494 கோடி செலவு செய்த பாஜக  மொத்த செலவில் 44%

2024ஆம் ஆண்டு மார்ச் 16  முதல் ஜூன் 6, 2024 வரை மக்களவை மற்றும் ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் ஒரே நேரத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களின் போது அரசியல் கட்சிகள் ரூ.3,352.81 கோடியைச் செல விட்டுள்ளன என ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR) தனது புள்ளிவிவரங்களில் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தேர்தல்களில் 32 தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளில் அதிக பட்சமாக பாஜக ரூ.1,494 கோடியை செலவிட்டுள்ளது. இது மொத்த செல வில் 44% ஆகும். அதே போன்று 2023-24ஆம் ஆண்டில் தேர்தல் பிரச்சா ரங்கள் மற்றும் பொது பிரச்சாரத்திற் காக பாஜக ரூ. 1,755 கோடி செலவிட்டது. பாஜகவிற்கு அடுத்தபடிய காங்கிரஸ் ரூ.620 கோடி செலவிட்டுள்ளது. இது மொத்த செலவில் 18.5% ஆகும். இந்தச் செலவில் தேசியக் கட்சிகள் ரூ.2,204 கோடிக்கும் (65.75%) அதிக மாகச் செலவிட்டன. அதேபோல தேர்த லுக்காக வசூலிக்கப்பட்ட மொத்த நிதியில், தேசிய கட்சிகள் ரூ.6,930.24 கோடி (93.08%) வசூலித்தன. அதே நேரத்தில் மாநில கட்சிகள் ரூ.515.32 கோடி (6.92%) வசூலித்தன. பொதுத் தேர்தலுக்கு 90 நாட்களுக்குள்ளும், மாநிலத் தேர்தலுக்கு 75 நாட் களுக்குள்ளும் அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டிய கட்டாய செலவு அறிக்கைகளின் அடிப்படையில் இந்தப் பகுப்பாய்வு அமைந்துள்ளது. கட்சிகளின் செலவுப் பட்டியலில் விளம்பரம் முதலிடத்தில் உள்ளது. கட்சிகள் தங்கள் மொத்த செலவில் ரூ.2,008 கோடி அல்லது 53%-க்கும் அதிகமாக விளம்பரத்துக்கு செல விட்டன. அடுத்ததாக பயணச் செலவு கள் ரூ.795 கோடியாக இருந்தன. அதைத் தொடர்ந்து வேட்பாளர்களுக்கு மொத்தமாக ரூ.402 கோடி செல விடப்பட்டது. கட்சிகள் டிஜிட்டல் பிரச்சாரங்களுக்காக ரூ.132 கோடிக்கும் அதிகமாகவும், வேட்பாளர்களின் குற்றப் பின்னணியை விளம்பரமாக வெளியிடு வதற்காக ரூ.28 கோடிக்கு அதிகமாக வும் செலவிட்டன. தேசிய அரசியல் கட்சிகள் பெற்ற நிதியில் கிட்டத்தட்ட 60% தெரியாத நபர்கள் மூலம் வந்தவை எனத் தெரி விக்கப்பட்டுள்ளது. 32 அரசியல் கட்சி களின் விளம்பரத்துக்கான மொத்த செல வில், ரூ.1,511.30 கோடி அல்லது 75.25% தேசிய கட்சிகளால் செலவிடப்பட்டது. ரூ.496.99 கோடி அல்லது 24.75% மாநில கட்சிகளால் செலவிடப்பட்டது. பயணச் செலவுகளும் நட்சத்திர பிரச் சாரகர்களுக்காக பெரிதும் இருந்தன. பயணத்துக்காக செலவிடப்பட்ட ரூ.795 கோடியில், ரூ.765 கோடி (96.22%) உயர்மட்ட கட்சி தலைவர்களை அழைத்துச் செல்வதற்காகவும், மற்ற தலைவர்களுக்கு ரூ.30 கோடி மட்டுமே செலவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.