tamilnadu

img

கிறிஸ்தவர்களைக் குறி வைத்து மதவெறி தூண்டும் பாஜக

தென்காசியில் சிபிஎம் முப்பெரும் விழா : கட்சி நிதி ரூ.7.68 லட்சம், தீக்கதிர் சந்தா ரூ.1.26 லட்சம் அளிப்பு

தென்காசி, ஜன.28- தமிழகத்தில் கிறிஸ்தவர்களை குறி வைத்து மதவெறியைத் தூண்டி மக்களைப் பிளவு படுத்த பாஜக முயற்சிக்கிறது; தமிழக மக்கள் ஒன்றுபட்டு நின்று இதை முறியடிக்க வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அழைப்பு விடுத்தார். கட்சியின் தென்காசி மாவட்டக்குழு சார்பில் கட்சி நிதியளிப்பு, தீக்கர் சந்தா அளிப்பு, தோழர் ஏ.நல்லசிவன் நூற்றாண்டு என முப்பெரும் விழா தென்காசியில் வியாழனன்று நடைபெற் றது. இதில் கட்சி வளர்ச்சி நிதியாக ரூ.7 லட்சத்து  68 ஆயிரத்தை மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணனிடம், மாநிலக்குழு உறுப்பினர் பி.சுகந்தி,  மாவட்டச் செயலாளர் உ.முத்துப் பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக் கமிட்டி செயலாளர்கள் வழங்கினர்.

தொடர்ந்து தீக்கதிர் சந்தா ரூ. ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 500-ஐ தீக்கதிர் பொறுப்பாளர் கணபதி, மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ண னிடம் வழங்கினார். நிகழ்வில் பேசிய பாலகிருஷ்ணன், “கட்சி யின் தென்காசி மாவட்டக்குழு உதயமான தரு ணத்தில் கொரோனா தொற்றுப் பரவலால் எந்த ஒரு பெரிய நிகழ்வை நடத்த இயலாத நிலை இருந்தது. இருப்பினும் இந்த மாவட்டத்தில் கட்சி மக்களின் அன்றாடப் பிரச்சனைகளில் கவனம் செலுத்தியது.  தற்போது முப்பெரும் விழாவை நடத்துகிறது. இந்த முதல் நிகழ்வில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தென்காசி மாவட்டக்குழு இந்த ஓராண்டில் அரிய பணி களைச் செய்து மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளது. அதற்கு அடையாளமாக மக்கள் ரூ.7 லட்சத்து 68 ஆயிரம் நிதியை வாரி வழங்கி,  நற்சான்றிதழ் வழங்கியுள்ளனர். என்றைக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு உறுதுணையாக இருப் போம் என மக்கள்  தங்கள் ஆதரவை வெளிப் படுத்தியுள்ளனர்” என்றார்.

கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்களின் மகத்தான பணி

மேலும் அவர் பேசியதாவது: இன்றைக்கு தமிழகத்தில் மதவெறியையும், மத மோதலை யும் உருவாக்கும் வேலையில் பாஜக ஈடுபடு கிறது. அவர்களுக்கு ஆதரவாக அதிமுக உள்ளது.  மக்கள் பிரச்சனைகள் எவ்வளவோ உள்ளது.  அதைப் பற்றி கவலைப்படாத பாஜக, கிறிஸ்த வர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களை குறி வைத்து தாக்குகிறது. கிறிஸ்தவ பள்ளிகள் மத மாற்றம் செய்வதாக தவறான குற்றச்சாட்டைக் கூறுகிறது. கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் கிறிஸ்தவ கல்வி நிறு வனங்கள் சீரிய பணியாற்றி வருகின்றன. கிறிஸ் தவ கல்வி  நிறுவனங்களால் பிற்படுத்தப் பட்டோர், பட்டியலின சமூகத்தினர், பழங்குடி மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் பலனடைந்து ள்ளனர். சகோதரர்களாக வாழ்ந்து வரும் மக்களை பிளவுபடுத்த பாஜக முயல்கிறது. இதை நாம் முறியடிக்க வேண்டும்.

தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த திமுக கடந்த எட்டு மாதத்தில் பல்வேறு நல்ல  திட்டங்களை செயல்படுத்துகிறது. அவர்கள் செய்ய வேண்டியது இன்னும் ஏராளம் உள்ளது. அதற்காக நாம் குரல் கொடுக்க வேண்டும். மக்க ளின் அடிப்படைப் பிரச்சனைகளில் மக்க ளின் பக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிற்கும். இராஜபாளையம் முதல் தென்காசி வரை அமையவுள்ள தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1,200 ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப் படும் என விவசாயிகள் கோரிக்கை மனு  அளித்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகளி டம் பேச்சுவார்த்தை நடத்தப்படும். முதல்வரின் கவனத்திற்கும் இந்தக் கோரிக்கை கொண்டு செல்லப்படும். விளை நிலங்கள் பாதிக்காத வகையில் ஒன்றிய அரசு நெடுஞ்சாலைப் பணி களை மேற்கொள்ள வேண்டும். மறைந்த தோழர் ஏ.நல்லசிவன் எளிமைக்கும் நேர்மைக்கும் இலக்கணமாகத் திகழ்ந்தார். உழைப்பாளி மக்களுக்காக பாடுபட்டார். அவர்  பிறந்த தென்காசி  மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி  மக்களின் ஆதரவோடு வள ரும். அந்த வளர்ச்சிக்கு நாம் ஒவ்வொருவரும் பாடுபடுவோம். இவ்வாறு  அவர் பேசினார். நிகழ்வில் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் டி.கணபதி, பி.வேலுமயில், வி. குணசீலன், எம்.வேல்முருகன், எஸ்.அயூப்கான், பி.உச்சிமாகாளி, எம்.தங்கம், பி.அசோக்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கட்சி  நிதி வசூல், தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கத்தில் ஈடுபட்ட அனைத்துத் தோழர்களையும் கே.பாலகிருஷ்ணன் பாராட்டி புத்தகங்களை பரிசளித்தார்.

 

;