சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி
விழுப்புரம், மே 13- கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்த லில் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி இந்திய அரசியலில் திருப்பு முனையை ஏற் படுத்துவது உறுதி என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறினார், விழுப்புரத்தில் சனிக்கிழமையன்று (மே 13) செய்தியாளர்களிடம் அவர் கூறியது வரு மாறு: கர்நாடகத்தில் பிரதம நரேந்திர மோடி வீதி, வீதியாகச்சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டும், பாஜகவுக்கு மிகப்பெரிய தோல்வி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தல் முடிவு என்பது இந்திய அரசியலில் ஒரு திருப்பு முனையாக அமைந்திருக்கிறது. கர்நாடக தோல்வி பாஜக மற்றும் நரேந்திரமோடி, அமித்ஷா கூட்டணிக்கு விழுந்த மரண அடி யாகும், சமீபகாலங்களில் நடைபெறும் தேர்தல் களில் பாஜக படுதோல்வி அடைந்து வரு கிறது. உதாரணமாக இமாச்சல் சட்டப்பேர வைத் தேர்தல் , புதுதில்லி, சிம்லா மாநக ராட்சித் தேர்தல் என பாஜக தொடர் தோல்வி யை சந்தித்து வருகிறது, இதன் தொடர்ச்சி யாகக் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலி லும் தோல்வி அடைந்துள்ளது. இந்த தொடர் தோல்வியானது 2024 இல் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், பாஜக படுதோல்வி அடையப் போவதற்கான அறிகுறியாகும். பாஜகவைத் தோற்கடித்து மதச்சார்பற்ற சக்தி களுக்கு வாக்களித்த கர்நாடக மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாழ்த் துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
பட்டியலின பழங்குடி மக்கள் மாநாடு
விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வருகின்ற மே-16 ஆம் தேதி பட்டியலின பழங்குடி மக்கள் உரிமை மீட்பு மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் சாதி வெறி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பட்டி யலின மக்கள் மற்றவர்களோடு சமமாக வாழ வேண்டும், ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும், அனைத்து சாதியின ரும் இணைந்து வாழும் வகையில் வீட்டு மனைப்பட்டா வழங்கவேண்டும், சாதியற்ற சமூகம் அமையவேண்டும் என்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
சட்டத்தை மீறுவோரை கைது செய்க!
பொதுவாக, சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் கைது செய் யப்பட வேண்டும். அதில், தீட்சிதர்களுக்கு விதிவிலக்கு கிடையாது. குழந்தைத் திரு மணத்தை ஆதரிக்கின்ற எவரும் ஆளுநராக இருக்க முடியாது. குழந்தைத் திருமணத்தை ஆதரிக்கின்ற ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று தமி ழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கவும் வலியுறுத்துவோம்.
அமைதியான மாநிலம்
தமிழகம் அமைதியாக உள்ளது. இயல் பாக நடைபெறும் சில சம்பவங்களை வைத்து சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்று சொல் வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
திருமாவளவனுக்கு நன்றி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப் படுகின்றன. இந்தாண்டில் எனக்கு ‘மார்க்ஸ் மாமணி’ விருது வழங்கவுள்ளதாக அறி விக்கப்பட்டுள்ளது. விருதுக்கு என்னைத் தேர்வு செய்த தொல்.திருமாவளவன் மற்றும் விருது தேர்வுக்குழுவினருக்கு நன்றி தெரி வித்துக்கொள்கிறேன். கரும்புக்கான கொள் முதல் விலையை அதிகரிக்கவும், நிலு வைத்தொகையை வழங்கவும் தமிழக முதல் வர் நிச்சயமாக நடவடிக்கை மேற்கொள் வார் என நம்புகிறேன். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரி வித்தார். செய்தியாளர்கள் சந்திப்பின்போது கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் டி. ரவீந்தி ரன், முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வி. ராதாகிருஷ்ணன், எஸ்.முத்துக்குமரன், ஜி. ராஜேந்திரன்,சே.அறிவழகன், ஆர்.டி.முரு கன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.