திருவாரூர், ஜூன் 20 - திருவாரூர் மாவட்டம் காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் திறப்பு விழா செவ்வாயன்று நடைபெற்றது. தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடி மதிப்பில் சுமார் 7000 சதுர அடி பரப்பளவில் கட்டப் பட்டுள்ள கலைஞர் கோட்டத்தினை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லினும், பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி முத்துவேலர் நினைவு நூலகத்தையும் திறந்து வைத்தனர். தயாளு அம்மாள் அறக்கட்டளை யின் நிர்வாக அறங்காவலர் மோகன் ராமேஸ்வரன் வரவேற்புரை யாற்றினார். பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி சிறப்புரை யாற்றினார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவுரையாற்றினார். முன்னதாக காலையில் கவிப்பேர ரசு வைரமுத்து தலைமையில் கவி யரங்கம், சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம், கலைமா மணி மாலதிலஷ்மண் குழுவினரின் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் தலை வர்கள் இரா.முத்தரசன், தொல்.திருமா வளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப் பினர்கள், சட்டமன்ற உறுப்பினர் கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொது மக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.