கர்நாடகா - தமிழ்நாடு மாநி லங்களின் எல்லையான அத்திப்பள்ளியில் அக்., 7 அன்று பட்டாசுக் கடை குடோன் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் அத்திப்பள்ளி பட்டாசு விபத்து தொடர்பாக கர் நாடக முதல்வர் சித்தராமையா அதி காரிகளுடன் ஆலோசனை நடத்தி னார். ஆலோசனைக்கு பிறகு முதல் வர் சித்தராமையா கூறுகை யில், “கர்நாடகத்தில் அரசியல் கட்சி நிகழ்ச்சிகள், பேரணிகள், மத நிகழ்ச்சிகள், ஊர்வலங்கள் மற்றும் திருமணங்களில் பட்டாசுகள் வெடிப்பது தடை செய்யப்படுகி றது. தடையை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் படும். ஆனால் பசுமை பட்டாசு கள் வெடிப்பதற்கு எவ்வித தடை யும் இல்லை. தற்போது பட்டாசு கடைகள் அமைக்க உரிமம் பெறும் போது அவை 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் நிலையில், அதை ஒவ்வொரு ஆண்டும் புதுப் பிக்கும் வகையில் மாற்றப்படும்” என அவர் அறிவித்துள்ளார். அத்திப்பள்ளி சம்பவம் தொடர் பாக வட்டாட்சியர், காவல் ஆய் வாளர் மற்றும் தீயணைப்பு அலு வலர் ஆகிய 3 பேரை கர் நாடக முதல்வர் சித்தராமையா பணி நீக்கம் செய்திருந்தார் என் பது குறிப்பிடத்தக்கது.