மதுரை, ஜன.16- மதுரை மாவட்டம் பாலமேட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பாலமேடு பகுதியைச் சேர்ந்த அரவிந்த்ராஜ் (26) என்ற மாடுபிடி வீரர் காளை வயிற்றின் குத்தியதில் உயிரிழந்தார். மருத்துவமனை முதன்மையர் ஏ.ரத்தினவேல் கூறுகையில், திங்கள் மதியம் இரண்டு மணி நிலவரப்படி ஜல்லிக்கட்டில் காயமடைந்த எட்டு பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஐந்து பேர் உள்நோயாளிகளாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவர் பிறநோயாளிகளாகச் சிகிச்சை பெற்றுச் சென்றனர். ஒருவர் உயிரிழந்துவிட்டார் என்றார்.சுகாதாரத் துறை அதிகாரிகளின் தகவல்படி, திங்கள்கிழமை பிற்பகல் வரை பாலமேடு ஜல்லிக்கட்டில் 19 பேர் காயமடைந்தனர்.