tamilnadu

img

காயிதே மில்லத் கல்வி சமூக அறக்கட்டளை சார்பில் அரசியல் மற்றும் பொதுவாழ்வில்  நேர்மைக்கான விருது வழங்கும் விழா

காயிதே மில்லத் கல்வி சமூக அறக்கட்டளை சார்பில் அரசியல் மற்றும் பொதுவாழ்வில்  நேர்மைக்கான விருது வழங்கும் விழா மேடவாக்கத்தில் உள்ள காயிதே மில்லத் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. பேராயர் தேவசகாயம் தலைமையில் நடைபெற்ற விழாவில் வரலாற்று ஆசிரியர் இர்பான் ஹபிப் மற்றும் டில்லி விவசாயிகள் போராட்ட ஓருங்கிணைப்புக்குழுவுக்கு (எஸ்.கே.எம்) காயிதே மில்லத் விருது வழங்கப்பட்டது. மூத்த பத்திரிகையாளர் என்.ராம் வழங்கிய அந்த விருதினை ஒருங்கிணைப்புக்குழு சார்பில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஹன்னன் முல்லா பெற்றுக்கொண்டார்.  இந்த விழாவில் முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், காயிதே மில்லத் அறக்கட்டளை நிர்வாகி தாவூத் மியாகான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.