tamilnadu

img

ஆட்டோ தொழிலாளர் சம்மேளன நிர்வாகிகள் தேர்வு

திருவாரூர், ஜுன் 12 - திருவாரூர் ஜுன் 10, 11 தேதிகளில் நடைபெற்ற தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) மாநாட்டில் 21 நிர்வாகிகள் உட்பட 69 மாநிலக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தலைவராக வி.குமார், செயல் தலைவராக எஸ்.பாலசுப்பிரமணியம், பொதுச்செயலாளராக எம்.சிவாஜி, பொருளாளராக இ.உமாபதி, துணை செயலாளர்களாக எம்.கே.என் அனிபா, என்.கனகவேல், டி.முரளி, எஸ்.மணிகண்டன், சரவணன், கபாலி, பாண்டியன், துணை தலைவர்களாக ஆர்.தெய்வராஜ், பி.என்.தேவா, ஜி.சீனிவாசன், ஆர்.செல்வம், ஜெ.முகமது அனிபா, சி.கண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.