tamilnadu

img

அருந்ததியர் உள் இடஒதுக்கீடு உரிமை முன்னாள் முதல்வர் கலைஞர்,சிபிஎம் தலைவர் என்.வரதராஜன் பங்களிப்பு ஈடுஇணையில்லாதது

மதுரை, ஆக.31- அருந்ததியர் உள் இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றுவதற்காக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் அரசு நிர்வாகத்தில் அமர்ந்து மேற் கொண்ட பணியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் அவர்கள் மக்கள் மன்றத்தில் நிகழ்த்திய அறப் போரும் ஈடு இணையில்லாதது என்று ஆதித் தமிழர் கட்சி, அவர்களின் பங்களிப்புக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஆதித்தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர்கு.ஜக்கையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது: கால் நூற்றாண்டு காலமாக சமூக நீதியைப் பெறுவதற்காக அருந்ததியர் மக்கள் நடத்தியப் போராட்டத்தில் துணை நின்ற மகத்தான போராளி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. விருதுநகரில் துவங்கிய நெடும் பயணம். மாநாடுகள், ஆர்ப்பாட்டங்கள், மறியல் போர், பேரணிகள் என தமிழ கம் முழுவதும் முழங்கியஉரிமை முழக் கம் இறுதியாக முத்தமிழறிஞர் டாக்டர் கலை ஞர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஒரு தாயைப் போல் கனி வோடு பரிசீலித்து அல்லல்பட்ட மக்களின் அழுகுரல்களின் நியாயத்தைப் புரிந்து கொண்டு 2009ல் தந்தை பெரியாரின் சமூகநீதியை நிலை நாட்டியுள்ளது.

அம்பேத் கரின் கனவை நனவாக்கியுள்ளது. உச்ச நீதிமன்றம், 3 சதவீத உள் இடஒதுக்கீடு சட்டப் படி செல்லும் எனதீர்ப்பு வழங்கியுள்ளது. உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான உரிமையை மாநில அரசுகளுக்கே வழங்கியிருப்பதன் மூலம் மாநிலங்களுக்கான அதிகாரத்தையும் ஓரளவிற்காவது காப்பாற்றி யுள்ளது. இந்த வழக்கில் தங்களையும் மனுதாரர்க ளாக இணைத்துக் கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் மத்தியக் குழுஉறுப்பினர் பி.சம்பத் ஆகியோருக்கு நெஞ் சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.  வழக்கை நடத்திட துணைநின்ற தமிழ் மாநிலக்குழுவிற் கும், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துகொள் கிறோம். வஞ்சிக்கப்பட்ட அனைத்து மக்களின் உரி மைக்கும் தொடர்ந்துகுரல் எழுப்புவோம் என ஆதித்தமிழர் கட்சி தெரிவித்துக் கொள்கிறது. ஏப்ரல் 29 அன்று அருந்ததியர் உள் ஒதுக்கீடு சட்டம் தமிழகசட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இச்சட்டத்தை நிறை வேற்றுவதற்காக டாக்டர் கலைஞர் அவர்கள் அரசு நிர்வாகத்தில் அமர்ந்து மேற் கொண்ட பணியும், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் அவர்கள் மக்கள் மன்றத்தில் நிகழ்த்திய அறப்போரும் ஈடு இணையில்லாதது. திமுகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அருந்ததியர் இடஒதுக்கீடுஉரிமைப் போரில் இரட்டைக் குழல் துப்பாக்கியைப் போல் செயல்பட்டன என்றால் அது மிகையல்ல. அதன் விளைவு செருப்புத் தைய்ப்பவனின் மகன் பெருமையோடு நடந்தான். மலம் அள்ளியவனின் பிள்ளை மருத்துவராய் நிமிர்ந்தான். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சில சனாதனவாதிகள் உயர்நீதிமன்றத்தில் துவங்கி உச்சநீதிமன்றம் வரை சென்றார் கள். நேற்றுவரை என்ன நடக்குமோ என்கிற பதற்றமும், அச்சமும் பற்றிக் கொண்டிருந்தது, ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா அவர்கள் தலைமையிலான 5 நீதிபதி களைக் கொண்ட அமர்வு அறத்தை நிலை நாட்டியுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

;