“திருத்தப்பட்ட சட்டத் தொகுப்பில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்களா?”
ஒன்றிய மோடி அரசு 29 மத்திய தொழிலாளர் சட்டங் களை ஒருங்கிணைத்து, 4 புதிய திருத்தப்பட்ட தொழி லாளர் சட்டத் தொகுப்பு களை (Labour Codes) 2025ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி அமல்படுத் தியது. ரத்து செய்யப் பட்ட பழைய தொழிலாளர் சட்டங்கள் தொடர்பான விதியால் ஏற்படும் குழப்பங்களை நீக்குகிறோம் என்ற பெயரில், “புதிய தொழிலாளர் உறவுகள் திருத்த மசோதா” நாடாளுமன்ற மக்கள வையில் புதனன்று தாக்கல் செய்யப் பட்டது. இந்த மசோதாவை ஒன்றிய தொழி லாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தாக்கல் செய்தார். தொட ர்ந்து வியாழக்கிழமை மக்களவையில் தொழிலாளர் சட்டத் திருத்த மசோதா குறித்த விவாதம்நடைபெற்றது. விவாதத்தில் திருத்தப்பட்ட சட்டத் தொகுப்பில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்களா? என நாடாளு மன்ற மக்களவையில் “இந்தியா” கூட்டணி யில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கி ரஸ் கட்சியின் (சரத்) எம்.பி., சுப்ரியா சுலே கேள்வி எழுப்பினார். தொடர்ந்து இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “இந்தியாவில் 42% தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகின்ற னர். ஆனால், இந்த மசோதாவில் கிக் தொழிலாளர்கள் (Gig workers) மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளில், எல்ஐசி, மசாகன் டாக்ஸ் (மகாராஷ்டிர கப்பல் கட்டும் ஆலை) போன்ற பொதுத்துறை நிறுவனங் கள் ஒரு ஒப்பந்தத்தொழிலாளரைக் கூட பணி நிரந்தரம்செய்யவில்லை. நாங்கள் முதலாளித்துவத்திற்கு எதிரான வர்கள் அல்ல; ஆனால், ஏழைகள் மற்றும் உரிமைகள் பறிக்கப்பட்டவர் களின் உழைப்பின் மீது இந்த அர சாங்கம் இந்தியாவின் வளர்ச்சியை உருவாக்குவதை எங்களால் அனுமதிக்க முடியாது” என எச்சரிக்கை விடுத்தார்.
