பெலகாவி, பிப்.6- காவிரி நடுவர் மன்றத்தின் அடுத்தக் கூட்டத்தில் மேகதாது பாசனம் மற்றும் நீர் மின் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என மாநில அரசு நம்பிக்கை கொண் டுள்ளதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ஹீப்பள்ளியில் ஞாயிறன்று தெரிவித்தார். தீர்ப்பாயம் அனுமதித்தவுடன் திட் டத்தை செயல்படுத்துவதில் நாங்கள் உறுதி யாக உள்ளோம் எனக் கூறிய பொம்மை, இது தொடர்பாக இரண்டு முறை தீர்ப்பாயக் கூட்டங்களில் விவாதிக்கப்பட்டது. அவர் களிடமிருந்து எங்களுக்கு நல்ல பதில் கிடைத்துள்ளது. அடுத்தக் கூட்டத்தொடரில் ஒப்புதல் பெறப்படும் என உறுதியாக நம்புகிறோம். இத்திட்டத்திற்கு, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பது, நாங்கள் நம்பிக்கையுடன் இருப்பதை காட்டுகிறது என்றார். மகதாயி குடிநீர் திட்டத்தை முன்னெ டுப்பதில் சட்டரீதியான தடைகள் எதுவும் இல்லை. அனைத்துத் தடைகளும் தீர்க்கப்பட்டு, நதிநீர் கரையோர மாநி லங்களுக்கு நடுவர் மன்றம் தெரிவித்த நீரின் பங்குகளை விநியோகித்துள்ளது. எங்க ளுக்கு ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டில் பணி களை மேற்கொள்வதில் எந்தப் பிரச்னை யும் இல்லை. இருப்பினும், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் இருந்து எங்களுக்கு சில அனுமதிகள் தேவை. எங்களின் ஒதுக்கீட்டிற்குள் செயல்படு வதால், அந்த அனுமதிகளை பெறுவதில் சிரமம் இருக்காது என்றார். கிருஷ்ணா நதி நீர் திட்டங்களுக்கு தேசிய திட்ட அந்தஸ்தை மாநிலம் கோரும். எந்த ஒரு திட்டத்தையும் தேசிய திட்டமாகக் கருது வதற்கு ஒன்றிய அரசு பல அளவுகோல் களை வகுத்துள்ளது. அந்தத் தரத்தில் பணி யாற்றுமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டேன். தொழிற்நுட்ப விவரங்கள் தயாரிக்கப்பட்ட பின் ஒன்றிய அரசிற்கு அனுப்பப்படும் என்றார்.