tamilnadu

குடியரசு தின தமிழக ஊர்திக்கு அனுமதி மறுப்பு உயர்நீதிமன்றத்தில் முறையீடு

சென்னை, ஜன. 21 - குடியரசு தினத்தன்று தில்லியில நடை பெறும் அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. இதனை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. குடியரசு தினத்தன்று (ஜன.26) தில்லி அலங்கார அணி வகுப்பில் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்கவில்லை. விடுதலைப் போராட்ட வீரர்கள் மருது  சகோதரர்கள், வேலுநாச்சியார், வ.உ. சிதம்பரனார், கவிஞர் பாரதியார் ஆகி யோரின் உருவங்கள் இடம் பெற்ற தமிழக அரசின் அணிவகுப்பை, ஒன்றிய அரசு நிய மித்த பத்து பேர் கொண்ட குழு நிராகரித்து விட்டது.  

இந்த அலங்கார ஊர்தி சென்னை யில் நடைபெறும் குடியரசு தின விழா வில் இடம்பெறும் என்றும், தமிழகம் முழு வதும் காட்சிப்படுத்தப்படும் என்றும் முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற (பொறுப்பு) தலைமை நீதிபதி முனிஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு முன்பு வழக்கறிஞர் பாபு சார்பில், வழக்கறிஞர் செல்வி ஜார்ஜ் ஆஜராகி, குடியரசு தின  விழா அணிவகுப்பில் தமிழக ஊர்திகள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது; அந்த வாகனங்களை இடம்பெற  உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளதாக  குறிப்பிட்டார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க  வேண்டும் என்றும் முறையிட்டார். இதுதொடர்பாக மனுத்தாக்கல் செய்திருந்தால்  திங்கட்கிழமை (ஜன.24) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக  தெரிவித்தனர்.

;