சென்னை,ஆக.2- பழனி முருகன் கோவி லில் இந்து அல்லாதவர்கள் நுழையக்கூடாது என்ற பெயர்ப் பலகையை மீண்டும் வைக்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம் பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை தலைமை அலுவலகத்தில் அமைச்சர் பி.கே. சேகர் பாபு தலைமையில் மாதாந்திர சீராய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது, “அனைத்து சாதியினரும் அர்ச்சகராக லாம் என்ற திட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட அர்ச்சகர் கள் நியமிப்பது தொடர்பாக ஆலோசனை நடை பெற்றது”என்றார். நாள் முழுவதும் அன்ன தானம் வழங்கும் திட்டத்தை 15 ஆம் தேதிக்குள் மேலும் 5 கோயில்களில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். இந்து சமய அறநிலை யத்துறை சார்பில் ரூ.4,995 கோடி மதிப்பிலான 5,433 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ள தாக சேகர்பாபு தெரி வித்தார். 866 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட் டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் இந்த ஆண்டின் இறுதிக்குள் 7,500 திருக் கோயில்களுக்கு திருப் பணிக்காக ரூ.150 கோடி வழங்கப்படும் என்றும் கூறினார்.