சென்னை, மார்ச் 20- கர்நாடக மாநிலம் பெங் களூருவில் உள்ள இந்திரா நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ‘ராமேஸ்வரம் கபே’ உணவகத்தில், மார்ச் 1 அன்று குண்டுவெடிப்பு நடத்தது. இதில் உணவக பணியாளர் கள் உள்பட 10 பேர் படுகாயம டைந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர் வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், குண்டு வெடிப்பு தொடர்பாக பேசிய ஒன்றிய வேளாண் இணை அமைச்சர் ஷோபா கரந்த் லாஜே, “தமிழகத்தில் பயிற்சி பெற்றுவிட்டு, பெங்களூரு வில் உள்ள ராமேஸ்வரம் கபே- வில் குண்டு வைத்துள்ளனர்” என தமிழர்கள் மீது பழிபோட் டார். இது கடும் கண்டனங்க ளுக்கு உள்ளானது. “அமைதி, நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய ஷோபா மீது உரிய சட்ட நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். பிரதமர் முதல் தொண்டர்கள் வரை, பாஜகவில் உள்ள அனைவரும் இதுபோன்ற கேவலமான பிரிவினைவாத அரசியலில் ஈடுபடுவதை உட னடியாக நிறுத்த வேண்டும். இந்த வெறுப்புப் பேச்சை தேர் தல் ஆணையம் கவனத்தில் கொண்டு உடனடியாக கடு மையான நடவடிக்கையைத் தொடங்க வேண்டும்” என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டா லின் கண்டித்தார். திமுக சார்பில் தேர்தல் ஆணையத் தில் புகாரும் அளிக்கப்பட்டது. இதையடுத்து, “தமிழ் சகோ தர சகோதரிகளே, நான் யாரையும் தாக்கும் விதத்தில் பேச முற்படவில்லை. இருப் பினும், என்னுடைய கருத்து பலருக்கு வேதனை அளித் துள்ளது தெரியவருகிறது. அதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். கிருஷ்ணகிரி வனப்பகுதியில் மறைமுக பயிற்சி மேற்கொள் ளும் கும்பலை குறித்தே என் னுடைய கருத்து, இருந்தது. மேலும் நான் தமிழ்நாட்டு மக் கள் குறித்து பேசிய கருத்தை திரும்ப பெற்றுக் கொள்கி றேன்” என இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே பின் வாங்கியுள்ளார். இதனிடையே மதுரை கடச்சனேந்தலைச் சேர்ந்த சி. தியாகராஜன் என்பவர் அளித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் காவல்துறை யினர், அமைச்சர் ஷோபா மீது 153, 153A, 505(1),(b) 505 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.