tamilnadu

img

இன்று அன்னியூர் சிவா எம்எல்ஏவாக பதவியேற்பு

சென்னை, ஜூலை 15- விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, 1 லட்சத்து 24 ஆயிரத்து 053 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். இந்நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக அன்னியூர் சிவா செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) காலை தலைமைச் செயலகத்தில் பேர வைத் தலைவர் மு. அப்பாவு முன்னிலை யில் பதவியேற்றுக் கொள்கிறார்.