tamilnadu

img

இழுத்தடிக்கப்பட்ட இழப்பீட்டு தொகை சிஐடியு சங்க தலையீட்டால் கிடைத்தது

மதுரை:
மதுரை மாவட்டம், அழகரடியில் வசித்துவந்தவர் பாரி. இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள  திருமுருகன்  அரிசி ஆலையில் 2010 ஆம் ஆண்டு பராமரிப்பு பணி செய்யும் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அரிசி ஆலையில் உள்ள  கொதிகலன் பழுதடைந்தது. இதனை பழுது பார்த்துக்கொண்டிருந்த  போது, கொதிகலனின் பைப்லைன் வெடித்து உடலில் தீக்காயம் ஏற்பட்டு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார்.ஆனால் சிகிச்சை பலனின்றி 14.3.2010 அன்று இறந்துவிட்டார். அவருக்கு2 குழந்தைகள் உள்ளனர். அவரது மனைவிசென்னை  தொழிலாளர்துறை இணை ஆணையர் முன்பாக தொழிலாளர் இழப்பீட்டு சட்டத்தின்கீழ் இழப்பீடு கோரி  வழக்குதொடர்ந்தார்.

2013 ஆம் ஆண்டு ரூ.3 லட்சத்து 31 ஆயிரத்து 140- ஐ இழப்பீடாக அளிக்க வேண்டும்என்று தீர்ப்பு வந்தது. தீர்ப்பிற்கு எதிராக ரிட் பெட்டிசன், அதற்கு மேல், மேல் முறையீடு என 7 வருடங்களாக வழக்கு இழுத்தடிக்கப்பட்டு கடந்த பிப்ரவரியில் வாரிசுதாரர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு தொழிலாளர் துறை இணை ஆணையர்முன்பாக ஆவணங்கள் சரி பார்க்கப் பட்டது. பின்னர்  ஒரு வாரத்தில் உரிய பணம் வங்கியில் வரவு வைக்கப்படும் எனஉறுதியளிக்கப்பட்டது.இதனை நம்பி அவருடைய பெண் குழந்தைக்கும் திருமணஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால்கணக்கில்  பணம் வரவு வைக்கப்படவில்லை. தனது நிலையை விளக்கி உரியதலையீடு செய்யக் கோரி சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசனுக்கு பாரியின்  மனைவி உதவி கோரி கடிதம் எழுதினார்.  கடிதத்தின் அடிப்படையில் தொழிலாளர் துறை அமைச்சர் மற்றும் சம்பந்தப் பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக  திங்கட்கிழமை உடனடியாக பணம் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. சிஐடியு மாநில தலைவருக்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்ததோடு சிஐடியு நிர்மல் பள்ளிக்கு ரூ.5 ஆயிரத்தை நிதி உதவியாக அளித்தனர்.

;