tamilnadu

உலகச் செய்திகள்

தைவானுக்கு ஆயுதங்கள் விற்பனை அமெ ரிக்கா நிறுத்த வேண்டும் என்று சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஜாவோ லிஜியான் வலியுறுத்தியுள்ளார். ஒரே சீனம் என்ற கோட்பாட்டில் அமெரிக்கா உறுதியாக இருப்பது அவ சியம் என்று கோரிய அவர், தைவானுக்கு ஆயுதங்க ளை விற்பது இந்தக் கோட்பாட்டுக்கு எதிரானதா கும். சீனாவின் உள்விவகாரத்தில் தலையிடுவதை அனுமதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

கிரீஸ் நாட்டின் மாணவர் அமைப்புகள் போர் எதிர்ப்புப் பேரணிகளை நடத்தியிருக்கிறார்கள். ரஷ்யா-உக்ரைன் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ள அமைப்புகள், அமெ ரிக்கா, நேட்டோ மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய வையும் போர் ஏற்படுவதற்குக் காரணம் என்று கூறி யுள்ளன.  கிரீஸ் நாடாளுமன்றத்தின் முன்பாக இசைக் கலைஞர்களின் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்திருந்த னர். போர் எதிர்ப்புப் பாடல்களை அந்த நிகழ்வில் பாடினர்.

வியட்நாம் மற்றும் கம்போடியா ஆகிய இரண்டு நாடுகளின் தலைநகரங்களுக்கு இடையில் உள்ள உறவை மேம்படுத்த வேண்டும் என்று கம் போடியாவுக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வியட் நாம் தூதுவர் குவென் ஹுய் டாங் கூறியுள்ளார். தனது நியமனத்திற்குப் பிறகு முதன்முறையாக கம்போடியா சென்ற அவர், இது குறித்த விவாதத்தை நடத்தியிருப்பதாகக் குறிப்பிட்டார்.  இதற்கு கம்போ டியத் தரப்பில் வரவேற்பு தரப்பட்டிருக்கிறது.