அதிமுக கட்சி விதிகளில் திருத்தம்
எதிர்த்து வழக்குத் தொடர அனுமதி ரத்து
சென்னை: அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்ததை எதிர்த்து வழக்குத் தொடர அனுமதி அளித்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்ததை எதிர்த்து அக்கட்சியின் தொண்டர்களான வழக்குரைஞர் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி ஆகியோர் உரிமையியல் வழக்குத் தாக்கல் செய்ய அனுமதி கோரி வழக்குத் தொடர்ந்த னர். வழக்குரைஞர்கள் தாக்கல் செய்த மனுவில், அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டு அதற்கேற்ப விதிகளில் திருத்தம் செய்தது, அதிமுகவின் சட்டத் திட்டங்களுக்கு எதிரானது என்று குறிப் பிட்டிருந்தனர். இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல் முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த, செந்தில்குமார் அமர்வு தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.