தருமபுரி, செப்.30- நூறுநாள் திட்டத்திற்கு உரிய நிதி மற்றும் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அக்.11 ஆம் தேதி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அகில இந்திய விவசாய தொழி லாளர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் நடை பெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவரும், சட்டமன்ற உறுப்பின ருமான எம்.சின்னதுரை தலைமை வகித்தார். இதில் சங்கத்தின் அகில இந்திய இணைச் செயலாளர் டாக்டர் சிவதாசன் எம்.பி., அகில இந்திய துணைத் தலைவர் ஏ.லாசர், தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், மாநிலப் பொருளாளர் அ.பழனிச்சாமி, மாநில துணைத் தலைவர்கள், மாநிலச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். நூறுநாள் வேலை திட்டத்தில் 4 மாதம் வரை வேலை செய்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காமல் ஒன்றிய மோடி அரசு, இத்திட்டத்தை சீரழித்து வருகிறது. இதனால் அடிப்படை யான உணவு தேவை, சுகாதாரம், மூத்த குடிமக்கள், குழந்தைகள் பராமரிப்பு செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். எனவே, சட்டப்படி வேலை செய்த 15 நாட்களுக்குள் ஊதி யம் வழங்க வேண்டும். 3 மாதங்களுக்கு மேல் ஊதியம் கொடுக்கப்படாமல் இருப்பது, சட்ட விரோதமானது. ஊதியம் வழங்க காலதாமதம் ஏற்பட்டால், ஊதியத்திற்கு வட்டி சேர்த்து வழங்க வேண்டும்.
மேலும், ஒதுக்கீடு செய்த நிதி ஒதுக்கீட்டில் கூட ஒன்றிய அரசோடு இணைந்து போகாத மாநில அரசுகளுக்கு நிதி வழங்கு வதில் பாரபட்சம் காட்டப்படு கிறது. அந்த வகையில், தமிழ் நாட்டிற்கு தர வேண்டிய நிதி ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு இழுத்தடிப்பு செய்கிறது. இத்தகைய அரசியல் காரணங்களால் கிராமப் புறங் களில் உழைப்பாளி மக்கள் கடு மையாக பாதிக்கப்படு வருகின்றனர். அதே நேரத்தில் நூறுநாள் வேலை அனைத்து மாவட்டங்க ளிலும் ஒவ்வொரு ஆண்டும் 50 முதல் 55 விழுக்காடு வரை வேலை நடைபெறுகிறது. சட்டக் கூலியும் தமிழ்நாடு முழுவதும் அமலாக்கம் செய்யப்பட வில்லை. ஆகவே, தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை முழுமையாக அமலாக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி அக்.11 அன்று தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய அரசுக்கு எதிராக பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து நகர்ப்புற நூறு நாள் வேலைத் திட்டம் 2022-23 ஆம் ஆண்டிற்கு நகர்ப்புற வேலைக்கான நிதியை தமிழ்நாடு அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதி இருந்தும் விடுபட்டவர்களை இணைக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் படியும் காவிரி மேலாண்மை வாரி யத்தின் படியும் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய தண்ணீரை வழங்க கர்நாடக அரசும், ஒன்றிய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.