சென்னை, ஜூலை 16- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண் முகம் விடுத்துள்ள அறிக்கை வரு மாறு: அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கம் உட்பட இடதுசாரி விவசாய தொழிலாளர் சங்கங்கள் கூட்டாக ஆகஸ்ட் 1 ஆம் தேதி நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்திட அறைகூவல் விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற வுள்ளது. நிலச்சீர்திருத்த சட்டத்தை முறை யாக செயல்படுத்தி நிலமற்ற ஏழை களுக்கு நிலம் வழங்க வேண்டும். வன உரிமைச் சட்டத்தை முறையாக அமல் படுத்த வேண்டும். பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான திட்டங்க ளுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்து முறையாக அமல்படுத்த வேண்டும். கிராமப்புற கல்வி மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும். வறுமை ஒழிப்புத் திட்டங்களை ஊழல் முறைகேடின்றி செயல்படுத்திட வேண்டுமென்பது உள்ளிட்ட 28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த கோரிக்கைகளை முழுமை யாக ஆதரிப்பதுடன், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று ஒத்துழைப்பை நல்குவது என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. எனவே, மாநிலம் முழுவதும் விவசாயிகள் ஆர்ப்பாட் டத்தில் திரளாக பங்கேற்று போராட் டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும். ஒன்றிய அரசும், மாநில அரசும் விவசாய தொழிலாளர்களின் முன்னேற் றத்திற்கான கோரிக்கைகளை நிறை வேற்ற முன்வருமாறு தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.