tamilnadu

img

அதிமுக ஆதரவு சுவரொட்டிகள் அகற்றப்படவில்லை...

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அருகில் உள்ள அமைச்சர் செல்லூர் ராஜூவின் அலுவலகம் அருகில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் சுவரொட்டிகள் அகற்றப்படவில்லை. அரசு வாகனங்களில் உள்ள அரசின் சாதனை விளக்க ஸ்டிக்கர்களை மாவட்ட தேர்தல் அலுவலர் இன்னும் கண்டுகொள்ளவில்லை.  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான வாகனம் ஒன்று அரசு விளம்பரத்துடன் நின்று கொண்டிருந்தது.  ஆட்சியர் அலுவலகத்தைச் சுற்றியுள்ள மின்கம்பங்களில் வடக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வி. வி. ராஜன் செல்லப்பா  மகன் ராஜ் சத்யனின்  விளம்பரங்கள் உள்ளன.
 

;