tamilnadu

நீர்நிலைகளில் கட்டட அனுமதி அதிகாரிகள் மீது நடவடிக்கை

நீர்நிலைகளில் கட்டட அனுமதி அதிகாரிகள் மீது நடவடிக்கை

 சென்னை: நீர்நிலை யில் அரசு அலுவலகம் கட்ட அனுமதித்த அதி காரிகள் மீது ஒழுங்கு நட வடிக்கை எடுக்கப்படு மென சுற்றறிக்கை வெளியிட வேண்டும்  என்று அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட அதி காரிகளிடம் இருந்து நிதி இழப்பு வசூலிக்கப்படும் என சுற்றறிக்கை வெளி யிடவும் ஆணையிடப்ப ட்டுள்ளது.  நீர்நிலை என பதிவு செய்யப்பட்டுள்ள நிலத் தில் அரசு ஆரம்ப சுகா தார நிலையம் கட்டுவ தாக கூறி மயிலாடுதுறை யைச் சேர்ந்த பிரகாசம் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். நீர்நி லைகளில் கட்டப்பட்ட அலுவலகங்களை இடம்  மாற்றுவது குறித்து 8 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.