tamilnadu

ஆந்திராவில் விபத்து : ஒன்பதுபேர் பலி

அனந்தபுரம், பிப்.7- ஆந்திர மாநிலத்தில் கார் மீது லாரி மோதியதில் 2 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலி யானார்கள்.  ஆந்திர மாநிலத்தின் அனந்தபுரம் மாவட்டம் புடகாவி கிராமத்தில் கார் மீது லாரி மோதிய சம்பவத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தை கள் உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.  தகவல் அறிந்து வந்த உருவகொண்டா காவல்துறை யினர் உடல்களை மீட்டு உடற்கூராய்விற்காக  மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதுகுறித்து உருவகொண்டா காவல் துணை ஆய்வாளர் வெங்கட சுவாமி கூறுகையில், காரில் ஓட்டுநர் உட்பட மொத்தம் ஒன்பது பேர் பயணம் செய்தனர். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்துள்ளது. காரில் அனைவரும் நிம்மகல்லுவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக சென்ற லாரி எதிர் திசையில் வந்த கார் மீது மோதியது. இவ்வாறு அவர் கூறினார்.