விழுப்புரம், ஏப். 27- இந்திய ஜனநாயக வாலிபர் சங்க சைக்கிள் பிரச்சார பயண குழுவின ருக்கு விழுப்புரம் மாவட்டத் தில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. இளைஞர்களுக்கு வேலை வழங்கவேண்டும், ஒன்றிய மாநில அரசு அலுவல கங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி சென்னையில் இருந்து வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா தலை மையில் புறப்பட்ட வாலிபர் சங்க சைக்கிள் பிரச்சார பயணக்குழுசெவ்வாயன்று (ஏப். 26)விழுப்புரம் மாவட்ட எல்லையான ஓங்கூர் சுங்கச் சாவடியை வந்தடைந்தது. அங்கு மாவட்டச் செய லாளர் சே.அறிவழகன் தலை மையில் மாவட்டத் தலைவர் எஸ்.பிரகாஷ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பட்டாசு வெடித்து, மலர் தூவி, சால்வை அணிவித்து குழு வினரை வரவேற்றனர், அதனைத் தொடர்ந்து ஒலக்கூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கட்சி யின் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவ ட்ட செயற்குழு உறுப்பினர் பி.குமார், வட்டச் செயலாளர் டி.ராமதாஸ், வாலிபர் சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.பார்த்திபன், சதீஷ்குமார், முன்னாள் தலைவர் ஏ.கண்ணதாசன் உள்ளிட்ட பலர் பேசினர். பின்னர் புதனன்று (ஏப். 27) திண்டிவனம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கூட்டேரிபட்டு வந்தனர். அங்கு மயிலம் ஒன்றியக்குழு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பெரியாண்டபட்டு, ரெட்டணை ஆகிய இடங் களில் வாலிபர் சங்கக் கொடி யை மாநிலச் செய லாளர் எஸ்.பாலா எழுச்சி மிகு முழக்கங்களுக்கு இடையே ஏற்றிவைத்தார். தொடர்ந்து மோழியனூர், நெடி, விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம்ஆகிய இடங்களிலும் சிறப்பான வாலிபர் சங்க பிரச்சார குழுவினருக்கு உணர்ச்சிப் பூர்வமான வரவேற்பு அளிக்கப்பட்டது.