tamilnadu

img

விடாமல் முயற்சித்து ஜனநாயகக் கடமையாற்றிய மூத்த தொழிற்சங்கத் தலைவர்

மதுரை மேலப் பொன்னகரம் நான்கா வது தெருவில் வசிப்பவர் எஸ்.மகபூப்ஜான் (72) இவர் மதிமுகவின் முக்கிய நிர்வா கிகளில் ஒருவர். தமிழகம் அறிந்த தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவர். மதுரையில் இவரைத் தெரியாத அரசியல் கட்சியினரோ, சமூக ஆர்வ லர்களோ இருக்க முடியாது. இவரை அறியாத மதுரை ஆட்சியர்களும் இருக்க முடியாது. 18-ஆவது மக்களவைத் தேர்தலில் இறுதி வாக்காளர் பட்டியலில் இவரது பெயர் விடு பட்டிருந்தது. இவரும் பார்க்காத அதிகாரிகள் இல்லை; தொடர்பு கொள்ளாத அதிகாரிகள் இல்லை. மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு பேசியும் நடவடிக்கை இல்லை. தேர்தலுக்கு முந்தைய நாள் வரை தனது பையில் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட ஆவணங்களை வைத்து, முயற்சித்துக் கொண்டிருந்தார். இதையடுத்து மகபூப்ஜான் தனது வாக்குரி மையை உறுதி செய்யுமாறு ஏப்.16-ஆம் தேதி புதுதில்லியிலுள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் இ-மெயில் மூலம் புகார ளித்தார். அங்கிருந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தேர்தல் பிரிவு அதிகாரி களைத் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர். அவர்களும் மகபூப்ஜானின் புகார்  குறைதீர்ப்பு சேவை இணையதளத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து தொடர் தலையீடுகளின் பின்ன ணியில், ஏப்ரல் 18 இரவு, மகபூப்ஜானுக்கு இந்தியத் தலைமை தேர்தல் ஆணையத்திலி ருந்து, தாங்கள் தங்களுக்குரிய  வாக்குச் சாவடி க்குச் சென்று வாக்களிக்கலாம் என்று பதில் வந்தது. இதையடுத்து அவர் ஏப்.19-ஆம் தேதி தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி னார். இது குறித்து செய்தியாளரிடம் பேசிய மக பூப்ஜான், “வாக்களிக்கும் உரிமையைப் பயன் படுத்துவதன் அவசியம் குறித்து மதுரையில் அதிகாரிகள் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியபோதும், எனது புகாரின் மீது மதுரை அதி காரிகள் நடவடிக்கை எடுக்காதது எனக்கு ஏமாற்றத்தையே அளித்தது. கடும் முயற்சிக ளுக்குப் பிறகு எனது வாக்குரிமையை நிலை நாட்டிய இந்தியத் தலைமை தேர்தல் ஆணை யத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன்’’ என்றார். இதுமட்டுமல்ல, வாக்காளர் பட்டியலில் பெரும் குழப்பம் இன்றும் உள்ளது. ஒரு குடும் பத்தில் தாய், தந்தை, மகன், மகள் இருந்தால் வரிசைப்படி வாக்காளர் எண் இருக்காது. தேர்தல் ஆணையத்தின் விருப்பத்தின்படி அவர்கள் பட்டியலில் எங்காவது ஒரு இடத்தில் இருப்பார்கள். உதாரணத்திற்கு மதுரை மேற்குத் தொகுதி யில் உள்ள கூடல்நகரில் உள்ள ஒரு குடும்பத் தைச் சேர்ந்தவரின் மகனின் பெயர் மதுரை கிழக்குத் தொகுதியில் இருந்தது. மதுரை தொகு தியில் இப்படி ஏராளமான குளறுபடிகள். வாக்காளர் பட்டியலை புதுப்பிப்பது என்பது முறையாக நடைபெறுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் அடுத்த டுத்து இல்லை. இணைப்பு என்று சொல்லி ஏதாவது ஒரு பக்கத்தில் சேர்த்துள்ளார்கள். ‘மண்டையைக் காய விடுவது’ தான் இன்றுவரை தேர்தல் ஆணை யத்தின் பணியாக உள்ளது.

;