tamilnadu

img

இறை நம்பிக்கையாளர் போற்றும் ஆட்சி

சென்னை,செப்.10- தமிழக இந்து சமய அறநிலை யத்துறை சார்பில் 1000-ஆவது கோவில் குடமுழுக்கு விழா சென்னை மேற்கு மாம்பலம் காசி  விஸ்வநாதர் கோவிலில் செப் டம்பர் 10 ஆம் தேதி நடை பெற்றது.  இதுகுறித்து தமிழக முத லமைச்சர் மு.க.ஸ்டாலின்  தனது டிவிட்டர் சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்ப தாவது: “எல்லார்க்கும் எல்லாம்” என்ற திராவிட மாடல் ஆட்சியில் அனைத்துத் துறைகளும் அதிவேகமாக வளர்ந்து வருகின்றன. குறிப்பாக இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் அனைத்திலும் சிறப்பாக இருக்கின்றன. 5000 கோடி ரூபாய் மதிப்பி லான கோவில் சொத்துக்களை இரண்டு ஆண்டு காலத்தில் மீட்டது திமுக அரசு. இன்றைய நாள்,1000-ஆவது கோவில் குடமுழுக்கு விழாவை மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோயிலில் நிகழ்த்தியிருக்கிறது இந்து சமய அறநிலையத் துறை. இறைநம்பிக்கையாளர் அனைவ ரும் போற்றும் இணையற்ற ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இதற்குக் காரணமான இந்து சமய அறநிலை யத் துறை அமைச்சர் பி. கே. சேகர் பாபுவையும், அதிகாரிகளையும், அலு வலர்களையும் பாராட்டுகிறேன். வாழ்த்து கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.