திருவனந்தபுரம், மே 30- திருவனந்தபுரம் கனகக்குந்நில் ‘எனது கேரளம்’ மெகா கண்காட்சியில் ஏ.கே.ஜி சிறை வைக்கப்பட்டிருந்த அறையின் மாதிரி பிரபலமடைந்து வரு கிறது. கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பூஜாப்புரா மத்திய சிறையின் 8ஆவது பிளாக்கில் உள்ள அறை எண் 32இல் அமைதியான சூழலில் முழக்கங்கள் கேட்கின்றன. ஜன்னலுக்கு வெளியே, முட்டி உயர்த்தி ஒரு வெல்ல முடியாத போர்வீரனை வாழ்த்துவதுபோல் காட்சி விரிகிறது. மக்கள் அரசு தனது முத லாம் ஆண்டு விழாவை கொண்டாடும் போது ஏழைகளின் தலைவனை-போர்வீரனை எப்படி நினைவுகூராமல் இருக்க முடியும். சிறைத்துறை தயாரித்த மாதிரி மத்திய சிறையில் ஏகேஜி- இருந்த அறை உள்ளது. இதை நான்கு அதிகாரிகள் மற்றும் 12 கைதிகள் தயாரித்தனர். உபரி நிலப் போராட்டத்தின் ஒரு பகுதியாக வும், அவசரநிலை காலத்திலும் பூஜாப்புரா சிறையில் ஏகேஜி அடைக்கப்பட்டார். அவசரநிலை காலத்தில் எட்டாவது பிளாக்கில் உள்ள அறை எண் 32இல் அவர் அடைத்து வைக்கப்பட்டார். அடுத்த செல்லில் சுசீலா கோபாலனும் இருந்தார். அதே பிளாக்கில் இ.எம்.எஸ், வி.எஸ்.அச்சு தானந்தன் ஆகியோரும் இருந்தனர். சிறைத் துறையின் அரங்கில் உள்ள செல் மாதிரி முன் நிற்கும் எவருக்கும் ஏகேஜியின் போராட்ட வாழ்க்கை நினை வுக்கு வரும். உபரி நிலத்துக்காக அவர் நடத்திய போராட்டம் வெளிப்படும். அதைத் தொடர்ந்து வரும் காட்சி லைப் மிஷன் திட்டத்தின் மாதிரி வீடு. நிலமற்ற ஏழைகளுக்கான உபரி நிலப் போராளியின் வழித்தோன்றல்கள் கற்பனை செய்த பெரிய திட்டம் இது. ஏராளமான மக்கள் இவற்றை பார்வையிட்டுச் செல்கின்றனர். வழிகாட்டிய போராட்ட நாயகருக்கு இதை விட சிறந்த நினைவுச்சின்னம் என்னவாக இருக்க முடியும்.