tamilnadu

img

கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத்திற்கு முழுமையான வெற்றி

திருச்சூர், நவ.30- கேரள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் அனைத்து இடங்களிலும் எஸ்எப்ஐ வெற்றி பெற்றது. மாநிலத்தில் கால்நடை பல்கலைக்கழகத்தின் கீழ் தேர்தல் அறிவித்த ஏழு கல்லூரி மாணவர் சங்க தேர்தல்களிலும் எஸ்எப்ஐ போட்டியின்றி மகத்தான வெற்றியை ஈட்டியுள்ளது. கேஎஸ்யு, ஏபிவிபி போன்ற அமைப்புகளால் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் வேட்புமனு கூட தாக்கல் செய்ய  முடிய வில்லை. பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவராக பி.கே.முஹம்மது முனீர், செயலாளராக ஏ. அக்சயா வெற்றி பெற்றனர். இணைச் செயலாளராக பி.டி. முகமது தின்ஷாத், துணைத் தலைவர்களாக சி.கே அதுல் மோகன், அல்பியா மிதுலாஜ், ஆகியோர் வெற்றி பெற்றனர். கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்  சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற எஸ்.எப்.ஐ.யின் கொண்டாட்டத்துக்குப் பிறகு மாநிலச் செயலாளர் பி.எம்.அர்ஷா வாழ்த்திப் பேசினார்.

;