tamilnadu

4 நாட்கள் பட்ஜெட் கூட்டத்தொடர்

4 நாட்கள் பட்ஜெட் கூட்டத்தொடர் சென்னை,மார்ச் 18- தமிழ்நாடு அரசின் 2022-2023 ஆம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வெள்ளியன்று (மார்ச் 18) சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து, பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் பேரவையின் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டத் தொடரை 24 ஆம் தேதி வரை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பேரவைத் தலைவர், “ மார்ச் 19 அன்று சட்டப்பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மார்ச் 21 முதல் 23 வரை பொது விவாதம் நடைபெறும். உறுப்பினர்களின் விவாதங்களுக்கு நிதி மற்றும் வேளாண் துறை அமைச்சர்கள் மார்ச் 24 அன்று பதில் அளிப்பார்கள் என்றும் பேரவைத் தலைவர் தெரிவித்தார்.