tamilnadu

img

பீகாரில் கூட்டணியில் இருந்த ‘விஐபி’ கட்சியையும் பாஜக சூறையாடியது!

பாட்னா, மார்ச் 25 - தங்களுக்கு செல்வாக்கு இல்லாத மாநி லங்களில், அங்குள்ள கட்சிகளுடன் கூட்டணி சேர்வதும், பின்னர் அந்த கூட்டணி கட்சி எம்எல்ஏ -க்களை தன்பக்கம் இழுத்து, ஒட்டுமொத்தமாக அந்தக் கட்சிகளையே இல்லாமல் அழிப்பதும் பாஜக-வின் தந்திரங்களில் ஒன்றாகும். அந்த வகையில் தற்போது பீகாரில் தனது கூட்டணியில் இடம் பெற்றுள்ள ‘விகா ஷீல் இன்சான் கட்சி’ எம்எல்ஏ-க்கள் 4 பேரில் 3 பேரை தன்பக்கம் இழுத்து, அந்த கட்சியை சூறையாடியுள்ளது. 2018-ஆம் ஆண்டு, முகேஷ் சஹானியால் துவங்கப்பட்ட விகாஷீல் இன்சான் கட்சி 2020  பீகார் சட்டப்பேரவை தேர்தலில், பாஜக தலை மையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து 11 தொகுதியில் போட்டியிட்டது. இதில் 4 தொகுதிகளில் வெற்றிபெற்றது.  அந்த நான்கு எம்எல்ஏ-க்களில் 3 பேரைத்தான், கூட்டணியில் இருந்துகொண்டே பாஜக தற்போது களவாடியுள்ளது. விகாஷீல் இன்சான் கட்சி எம்எல்ஏ-க்கள் 3 பேர், பாஜக -வில் இணைய விரும்புவதாக அம்மாநில சட்டப் பேரவை சபாநாயகரிடம் தெரிவித்துள்ளனர்.  இது விகாஷீல் இன்சான் கட்சி தலைவர் முகேஷ் சஹானியை அதிர்ச்சியில் ஆழ்த்தி யுள்ளது. என்ன சொல்வதென்றே தெரியாமல், “நேற்று வரை என்னுடன் இருந்த எம்எல்ஏ-க் களுக்கு எனது நல்வாழ்த்துக்கள். எங்கள் 3 எம்எல்ஏ-க்களின் மூலம், அவர்களின் (பாஜக) மொத்த எண்ணிக்கையை 77ஆக மாற்றியுள்ள னர். அவர்கள் (பாஜக) பீகாரின் நம்பர் 1 கட்சி யாக ஆகியிருக்கிறார்கள். அவர்களை நான் வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.