tamilnadu

img

மீண்டும் வேலை கோரி குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம்

திருச்சிராப்பள்ளி, டிச. 8 - திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக  நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வந்தனர். கொரோனா நோய் தொற்று காலத்திலும் அர்ப்பணிப்போடு பணியாற்றினர்.  இந்நிலையில் கடந்த நவ.16 ஆம் தேதி முதல் 28 தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட னர். இவர்களது குடும்பம் இந்த வேலையை மட்டுமே நம்பியுள்ளது. எனவே இவர்களது வாழ் வாதாரத்தை கருத்தில் கொண்டு, முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மீண்டும் வேலை வழங்க  கோரி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில்  மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம்,  கண்டன ஆர்ப்பாட்டம் என பல்வேறு போராட்டங் கள் நடத்தப்பட்டன.

ஆனால் இதுவரை தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை. இதனை கண்டித் தும், வேலை நீக்கம் செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் மீண்டும் வேலை வழங்கக் கோரியும் மகாத்மா காந்தி நினைவு அரசு  மருத்துவமனை வளாகத்தில் புதனன்று தொழி லாளர்கள் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத் தில் ஈடுபட்டனர்.  போராட்டத்திற்கு மகாத்மா காந்தி நினைவு  அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் மோகன் தலைமை வகித் தார். போராட்டத்தை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட துணை  தலைவர் மாறன், குடிநீர் வடிகால் வாரிய சங்க மாவட்ட செயலாளர் மருதைராசு, டி.ஆர்.இ.யு உதவி கோட்ட செயலாளர் ராஜா, கோட்ட தலைவர்  கரிகாலன் ஆகியோர் பேசினர். இதில் ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்ட  னர்.

;