சென்னை, பிப்.9- சென்னை கிண்டி கொரோனா அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண் டார். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகை யில்,“தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 4 விழுக்காடு மட்டுமே மருத்துவமனை படுக்கையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். ஆக்சிஜன் சிகிச்சையில் இருப்பவர்கள் 7 விழுக்கட்டினர் மட்டுமே. தீவிர சிகிச்சை பிரிவில் இதுவரை 7விழுக் காட்டினர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். டெல்டா மற்றும் ஒமைக்ரானால் பாதிக்கப் பட்டு 350 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றார். பிப்ரவரி 11 ஆம் தேதி தமிழ்நாடு முழுவ தும் 22-வது மெகா தடுப்பூசி முகாம் நடை பெறவுள்ளது. பிப்ரவரி 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும் அமைச்சர் தெரி வித்தார்.