tamilnadu

2,580 பஞ்சாயத்து, 25 நகராட்சிகளில் 100 விழுக்காடு தடுப்பூசி

சென்னை,ஜன.22- தமிழ்நாட்டில 2,580 பஞ்சாயத்து, 25 நகராட்சி பகுதிகளில் 100 விழுக்காடு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று  சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் 19-வது மெகா  தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் சனிக்கிழமையன்று(ஜன.22) நடை பெற்றது. சென்னையில் ஐ.ஐ.டி. வளாகத்தில் நடந்த சிறப்பு முகாமை சுகா தாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் மெகா தடுப்பூசி போடும் முகாம் பணிகள் தொடர்ந்து கடந்த 19 வாரங்களாக நடைபெற்று வருகிறது. இது  வரை 3 கோடியே 32 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த சிறப்பு  முகாம்களில் முதல் தவணை, 2 ஆம் தவணை, 15 வயதுக்கு மேற்பட்டவர் சிறு வர்கள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகளுக்கு தகுதியானவர்கள் போட்டுக் கொள்ளலாம். சிறுவர்களுக்கு இதுவரை 25  லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி  செலுத்தப்பட்டுள்ளது. இது 76 விழுக் காடாகும். இதுவரையில் தமிழகத்தில் 9 கோடியே 17 லட்சத்து 4 ஆயிரத்து 53 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஊராட்சி பகுதிகளை பொறுத்தவரை 2,580 ஊராட்சிகளில் 100 விழுக்காடும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நகராட்சி  பகுதியை பொறுத்தவரை 25 நகராட்சி களில் 100 விழுக்காடும் தடுப்பூசி போடப் பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் 1.5 லட்சம் பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆனாலும் உயிரிழப்பு 25, 30 பேர் என்ற அளவில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

;