11 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் வேலைவாய்ப்புத்திறன்கள் பாடத்தில் மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் தொழிற்கல்வி பிரிவு மாணவர் ஆ.மாதவன் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்த பாடம் இந்த கல்வியாண்டில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. மாணவர் மாதவனை பள்ளி நிர்வாகிகள், பள்ளித் தலைமையாசிரியர் ஷேக் நபி, ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பாராட்டினர்.