tamilnadu

img

கட்சி தாவும் எல்எல்ஏக்கள் தகுதி நீக்கப்பட வேண்டும்

இம்பால்:
2019 மார்ச் மாதம் மணிப்பூர் மாநிலத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல்நடைபெற்றது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் காங்கிரஸ் 28 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், பெரும்பான்மை பெறவில்லை. ஆனால், 21 தொகுதிகளில் மட்டுமேவெற்றிபெற்ற பாஜக, சிறிய கட்சிகளை வளைத்துப் போட்டு, அவர்களின் ஆதரவுடன் அதிகாரத்தில் அமர்ந்தது. பாஜக-வின் பிரேன் சிங்முதல்வராக பதவியேற்றார். எனினும், தனிப்பெரும்பான்மை இல்லாததால், அதனை அதிகரிக்க திட்டம் போட்ட பாஜக, குதிரைபேரம் மூலம் காங்கிரசை சேர்ந்த 6 எம்எல்ஏ-க்களை தங்கள் பக்கம் இழுத்தது. இவர்களில் ஷியாம் என்பவருக்கு அமைச்சர் பதவியும் வழங்கியது. அதைத்தொடர்ந்து, மேலும் 2 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கடந்தவாரம் பாஜக-வில் சேர்ந்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த காங்கிரஸ், அந்த 2 எம்எல்ஏ-க்கள் மீதும் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சபாநாயகர் யுமன்கேம்சந்த் சிங்-கிற்கு கோரிக்கை விடுத்தது. ஆனால், சபாநாயகர் அதை ஏற்கவில்லை. இதையடுத்து, மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது.இந்த வழக்கை விசாரித்த மணிப்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி நோபின்சிங், தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில், “சட்டப்பேரவை விதிகளின்படி, கட்சி மாறிய உறுப்பினர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். மேலும், “தகுதி நீக்கம் செய்யுமாறு சபாநாயகருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது” என்பதையும் ஒப்புக்கொண்டுள்ள நோபின் சிங், அதேநேரம் “காங்கிரஸ் கட்சி உறுப்பினர் அமைச்சரானது சட்டவிரோதம்” என்றும் அறிவித்துள்ளார்.

;