tamilnadu

img

மணிப்பூர்:குண்டு வெடிப்பில் 5 பேர் படுகாயம் 

மணிப்பூர் தலைநகர் இம்பாலா பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் 4 போலீஸார். பொதுமக்களில் ஒருவர் என 5 பேர் காயமடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் தங்கல் பஜாரில் நடந்த இன்று காலை குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 4 போலீஸார் மற்றும் பொதுமக்களில் ஒருவர் என 5 காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கிழக்கு இம்பாலில் கடந்த சனிக்கிழமை (நவம்பர், 2 ஆம் தேதி ) காலை 11.30 மணியளவில் நடந்த குண்டு வெடிப்பில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் மூவர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.