tamilnadu

img

ஒரே படுக்கையில் 2 நோயாளிகளுக்கு சிகிச்சை

மும்பையில் ஒரே படுக்கையில் 2 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது 

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதுவரை 1,65,799  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 71,105 ஆக உயர்ந்துள்ளது. 89,987 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,706 ஆக அதிகரித்துள்ளது.

''நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் இதுவரை   1,982பேர் உயிரிழந்துள்ளனர்.  அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் உயிரிழப்பு 960 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 321 ஆகவும் அதிகரித்துள்ளது.  மகாராஷ்டிராவில் இதுவரை  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,546 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 18,616 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் பிர்ஹன் மும்பை மாநகராட்சித் தகவல்களின் படி 645 ஐசியு படுக்கைகளில் 99 சதவீதம் நிரம்பிவிட்டன. ஆக்சிஜன் உதவியுடன் கூடிய 4,292 படுக்கைகளில் 65 சதவீதம் படுக்கைகள் நிரம்பியுள்ளன. 373 வென்ட்டிலேட்டர்களில் 73 சதவீதம்  உபயோகத்தில் உள்ளன.  மும்பையில்  நேற்று ஒரே நாளில் 1438 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளன.  நாட்டின் வணிகத் தலைநகரமான மும்பையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 35,273 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 38 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் மும்பையில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் இடவசதி இல்லாததால், ஒரே படுக்கையில் இரண்டு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலம் நிலவுகிறது எனபிபிசி தமிழ் வீடியோவுடன்  செய்தி வெளியிட்டு உள்ளது.

தி கார்டியன் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில்

மும்பையின் சியோன் மருத்துவமனை அவசர வார்டில் ஒரு படுக்கையில் இரண்டு நோயாளிகள் உள்ளனர்.  மும்பை, 2 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நகரம். ஆனால்  முன்னணி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போன்ற மருத்துவ ஊழியர்களின் பற்றாக்குறையையும் அங்கு உள்ளன என கூறி உள்ளது.