tamilnadu

சடலங்களுடன் 2 நாட்கள் இருந்த கொரோனா நோயாளிகள்

பீகாரில் சடலங்களுடன் 2 நாட்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட  நோயாளிகள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அளிக்கும் அறை யில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை வாங்க உறவினர்கள் முன் வரவில்லை. இதனால் நோயாளிகள் சடலத்தை அங்கிருந்து அகற்றாமல் இருந்தனர். இதைத்தொடர்ந்து அந்த வார்டில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த சடலம் அப்புறப்படுத்தப்பட்டது.