tamilnadu

உழவர் பாதுகாப்புத் திட்டம் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் பயன்பெற வருவாய்த் துறை அழைப்பு

பொள்ளாச்சி, ஆக. 1- பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை தாலுகா பகுதி களுக்குட்பட்ட விவசாயிகள் உழவர் பாதுகாப்புத்  திட்டத் தின் மூலமாக பயன்பெற வருவாய்த் துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

விவசாயிகள் வாழ்வாதாரத்தைக் காக்கும் விதமாக 2011 ஆம் ஆண்டு உழவர் பாதுகாப்புத் திட்டம் தமிழக அரசால் துவங்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் 18 வயது முதல்  65 வயது வரை சொந்தமாக நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளும், நிலமற்ற விவசாய கூலித் தொழிலாளர்க ளும் பயனடைய தகுதி பெற்றுள்ளனர்.

இதில் உழவர் பாது காப்பு அட்டை பெறுவோரின் மகள், மகனுக்கு திருமண உதவித் தொகை, கல்வி உதவித்தொகை மற்றும் ஆதர வற்றோருக்கு மாதம் ஆயிரம் ரூபாயும், முதியோர் உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.

 இந்நிலையில், இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விவசா யிகள் மற்றும் விவசாயக்கூலித் தொழிலாளர்கள் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் குடும்ப அட்டை நகல் மற்றும் புகைப்படத்துடன் விண்ணப்பித்து, உழவர் பாதுகாப்பு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

ஏற்கனவே அட்டை வைத்திருப்போர் முதியோர் மற்றும் கல்வி உதவித் தொகை  திட்டத்தின் கீழ் பயன்பெற பதிவு விவசாயிகள்,  விவசாயக் கூலித் தொழிலாளர்கள் முன்வர வேண்டுமென வருவாய்த் துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

;